skip to main
|
skip to sidebar
அன்றில்
Anril
வியாழன், ஏப்ரல் 30, 2009
கோபப்பட்டவன்...
முன்பு
எதற்கெடுத்தாலும்
கோபப்பட்டவன்...
இப்போது
எது நடந்தாலும்
பொறுமையாகவே
இருக்கிறான்
சிறையில்...!
(பத்திரிகையில் படித்த கவிதை)
புதன், ஏப்ரல் 29, 2009
நன்றி
மெழுகுவர்திக்கு
உயிர் கொடுக்க
உயிர் விட்டது தீக்குச்சி..
அதை நினைத்து நினைத்து
உருகியது மெழுகுவர்த்தி..
(எங்கேயோ படித்த கவிதை)
வெள்ளி, ஏப்ரல் 17, 2009
மௌனம்
எப்படியடி
உறங்குவேன்
என் இதயத்துக்குள்
பேர் இரைச்சலை
உண்டாக்குதடி
உன் மௌனம்!
(தமிழன்பன் கவிதை)
புதன், ஏப்ரல் 15, 2009
நூல்
ஊசியின் முனையில்
கோர்க்க்ப்பட்ட
நூல் புலம்புகிறது
மாட்டிக்கொண்டேன்
என்று...
அதற்கெங்கே
தெரியப்போகிறது
ஏழை மங்கையின்
மானத்தைக்
காக்கப்போகிறது
என்று!
(பத்திரிகையில் படித்த கவிதை)
மலிவு
எல்லா பொருட்களுமே
விலை ஏறிவிட்டது!
மனித உயிர்கள் மட்டும்
மலிவாகவே கிடைக்கிறது
என் தேசத்தின்
தெருக்களில்...
(தமிழன்பன் கவிதை)
பார்வை
அன்று உன்
பார்வை அலைகளால்
என்னை அடித்தாய்
இன்று என்
இதயப் பாறையில்
நினைவுப் பாசிகள்
(எங்கேயோ படித்த கவிதை)
கசந்தேன்
நான் காதல்
கொண்டபோது
வேப்பஞ் சாறும்
இனித்தது
காதலி காதலை
கொன்ற கணத்தில்
தேனும் கசந்தது
(தமிழன்பன் கவிதை)
ஞாயிறு, ஏப்ரல் 12, 2009
இப்படிக்கு
உனக்காக நான்
துடிக்கிறேன்
ஆனால் நீயோ
என்னைத் தவிர
யார் யாரையோ
நினைக்கிறாய்..
இப்படிக்கு,
உன் இதயம்
(கைபேசியில் வந்த கவிதை)
என் கல்லறைக்கு
ஒரு மலரின்
மேல் ஆசைப்பட்டதால்
பல மலர்கள் வந்தன
என்னைத் தேடி
என் கல்லறைக்கு
(கைபேசியில் வந்த கவிதை)
புதன், ஏப்ரல் 08, 2009
மறந்திருப்பேன்
கண் உள்ள வரை
பார்த்திருப்பேன்
காலம் உள்ள வரை
நினைத்திருப்பேன்
என்றோ ஒருநாள்
மறந்திருப்பேன்
அன்று நான்
இறந்திருப்பேன்
(கைபேசியில் வந்த கவிதை)
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
Search
அன்றில்கள்
பக்கங்கள்
முகப்பு
Blog Archive
►
2013
(2)
►
ஏப்ரல்
(2)
►
2012
(1)
►
செப்டம்பர்
(1)
►
2011
(3)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(2)
►
2010
(27)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(17)
►
மே
(6)
►
ஏப்ரல்
(2)
▼
2009
(48)
►
ஜூன்
(2)
►
மே
(2)
▼
ஏப்ரல்
(10)
கோபப்பட்டவன்...
நன்றி
மௌனம்
நூல்
மலிவு
பார்வை
கசந்தேன்
இப்படிக்கு
என் கல்லறைக்கு
மறந்திருப்பேன்
►
மார்ச்
(34)
எனது வலைப்பதிவு பட்டியல்
வட்டு
நரேந்திர மோடி பாடல்
2 ஆண்டுகள் முன்பு
கணித்தமிழ்
உலகின் மிக பெரிய 5 வங்கி கொள்ளைகள் | 5 MOST BRILLIANT BANK ROBBERIES | T...
7 ஆண்டுகள் முன்பு
அன்றில்
நீயாக நான்
12 ஆண்டுகள் முன்பு
தமிழ் உருநகரல்
கணிப்பையன்
15 ஆண்டுகள் முன்பு
முகமிழந்தவன்
யாரிவள்..?
15 ஆண்டுகள் முன்பு
சுவர்த்தாள்கள்
சுவர்த்தாள் இடுகை-4
16 ஆண்டுகள் முன்பு
இன்று
widget
பக்கங்கள் பார்க்கப்பட்டது