skip to main
|
skip to sidebar
அன்றில்
Anril
திங்கள், ஏப்ரல் 15, 2013
நீயாக நான்
என்னை வெல்வதற்கான உத்திகளை
நான் மட்டமே அறிந்திருந்த போதும்
உன்னிடம் மட்டும் ஏனடி
அடிக்கடி தோற்றுப் போகிறேன்
நீ நானாக இருப்பதாலா...!
பிடிவாதம்
வலிகளை வார்த்தைகளாக்கிய பின்பும்
மௌனத்தை மட்டும் ஏனடி
மாற்றமுடியாதென்கிறாய்....
வியாழன், செப்டம்பர் 27, 2012
விதிவிலக்கு
இருதயமோ மூளையோ இல்லாது
உயிர் வாழ்தல் சாத்தியமில்லைதான்
ஆனால்...
இருதயமே இல்லாமல் நீயும்
மூளையே இல்லாமல் நானும்
விதிவிலக்காய் எப்படி அன்பே...?
(தமிழன்பன் கவிதை)
புதன், நவம்பர் 02, 2011
நில்லா நினைவு
நில்லென்று சொன்னால்
நீயே நிற்பதில்லை -வரும்
நினைவெங்கே நிற்கும் அன்பே
உனைநீங்கி நில்லென்றால்.
(தமிழன்பன் கவிதை)
திங்கள், அக்டோபர் 31, 2011
பகிர்தல்
உளம் வருந்தி கொடுப்பதும்
உனை வருத்தி பெறுவதும்
இல்லை அன்பே ஆனந்தம்
பகிர்தல் ஒன்றே பரமானந்தம்
(தமிழன்பன் கவிதை)
ஞாயிறு, அக்டோபர் 30, 2011
காதல் கறை
மற என்றால் மறந்துவிட
காரமிட்டு அழித்துவிட
கறையல்ல பெண்ணே-அது
நெஞ்சில் காதல்
(தமிழன்பன் கவிதை)
வியாழன், ஜூலை 01, 2010
நினைவுகள்
ஆற்றங்கரை அரசமரத்தடி
அணைத்திருக்கும் மணல்மேடு
அருகிருக்கும் உன்னினைவுகள்
ஆனால் நீமட்டும் இன்றில்லை...
(தமிழன்பன் கவிதை)
மறுபரிசீலனை
மரணதண்டனைக்கு கூட
மறுபரிசீலனை இருக்கிறதே
நீமட்டும் ஏனடி
முடியாதென்கிறாய்....
(தமிழன்பன் கவிதை)
திங்கள், ஜூன் 21, 2010
தவிப்பு
எங்கே இசைத்தாலும்
நீயே மீட்டுவதாய்
தவிக்குதடி மனது
தர்க்கமே இல்லாமல்- என்
தாளங்களை போலவே...
(தமிழன்பன் கவிதை)
காலம்
கரைகிறது காலம்
உன் நினைவை
மட்டும்
உருகாமல்
உறையவிட்டு...
(தமிழன்பன் கவிதை)
தியானம்
மனதொடுக்கி
நிலைமறந்து
தியானிக்கிறாய் நீ
திசைமாறுதடி
என் திடம்...
(தமிழன்பன் கவிதை)
முரண்
நிழல் சூடானவெயிலாய்
தூறல் பெருமழையாய்
மென்பனி கடுங்குளிராய்
அமைதியான பேரிரைச்சலாய்
நானாக நீ என்னுள்ளே ...
(தமிழன்பன் கவிதை)
ஞாயிறு, ஜூன் 20, 2010
ஈரம்
நீலம் மறந்த வானம்
நில்லாது தூவும் மழை
குடையில்லாமல் - நீ
நனைந்தபடி என் மனது..
(தமிழன்பன் கவிதை)
உளவு
உளவறியும்
உன்பார்வையால்
என் களவறிந்து ஊர்
சொல்லும் நீ -என்
உளமறியாததேனோ..?
(தமிழன்பன் கவிதை)
சனி, ஜூன் 19, 2010
காலம்
எதிர்காலம் நிகழ்காலம் கடந்தகாலம்
என காலங்களை கடந்தகாலம் அன்பே- நீ
எக்காலத்தில் வந்தாயோ நான் அறியேன்
நீ வந்து போனது எனது கஷ்டகாலம்
....
(தமிழன்பன் கவிதை)
பழைய இடுகைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Search
அன்றில்கள்
பக்கங்கள்
முகப்பு
Blog Archive
▼
2013
(2)
▼
ஏப்ரல்
(2)
நீயாக நான்
பிடிவாதம்
►
2012
(1)
►
செப்டம்பர்
(1)
►
2011
(3)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(2)
►
2010
(27)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(17)
►
மே
(6)
►
ஏப்ரல்
(2)
►
2009
(48)
►
ஜூன்
(2)
►
மே
(2)
►
ஏப்ரல்
(10)
►
மார்ச்
(34)
எனது வலைப்பதிவு பட்டியல்
வட்டு
நரேந்திர மோடி பாடல்
2 ஆண்டுகள் முன்பு
கணித்தமிழ்
உலகின் மிக பெரிய 5 வங்கி கொள்ளைகள் | 5 MOST BRILLIANT BANK ROBBERIES | T...
6 ஆண்டுகள் முன்பு
அன்றில்
நீயாக நான்
12 ஆண்டுகள் முன்பு
தமிழ் உருநகரல்
கணிப்பையன்
15 ஆண்டுகள் முன்பு
முகமிழந்தவன்
யாரிவள்..?
15 ஆண்டுகள் முன்பு
சுவர்த்தாள்கள்
சுவர்த்தாள் இடுகை-4
16 ஆண்டுகள் முன்பு
இன்று
widget
பக்கங்கள் பார்க்கப்பட்டது