திங்கள், மார்ச் 30, 2009

குடை

நீ வெயிலில்
நடந்துசென்றால்
நான் இரு
குடையோடு வருவேன்
ஒன்று உனக்கு
மற்றொன்று
உன் நிழலுக்கு...!!


(கைபேசியில் வந்த கவிதை)

புதன், மார்ச் 25, 2009

வலி

பேசாத வார்த்தையை விட
பார்க்காத கண்களை விட
உன்னை
நினைத்துக்கொண்டிருக்கும்
இதயத்திற்கு தானடி
வலி அதிகம்


(தமிழன்பன் கவிதை) 

முதல் கவிதை

எனக்கு சுவாசம்
தந்தவளைப்பார்த்து
நான் வாசித்த
முதல் கவிதை
"அம்மா"



(கைபேசியில் வந்த கவிதை)

சனி, மார்ச் 21, 2009

நினைவுகளுடன்

உன்னை விட்டு
பிரியும் போதெல்லாம்
நான் தனியே
பேசிக்கொள்கிறேன்
என் நிழலுடன் அல்ல
உன் நினைவுகளுடன்


(பத்திரிகையில் படித்த கவிதை)

கண்ணீர்

உன்னை பார்த்த
போதுதான்
கண்கள் இருப்பதை
உணர்ந்தேன்
அதுபோல் உன்னை
காணாத போதுதான்
அதில் கண்ணீர்
இருப்பதையும் உணர்ந்தேன்

 (கைபேசியில் வந்த கவிதை)

வெள்ளி, மார்ச் 20, 2009

பட்டாம்பூச்சிகள்

சில நாழிகைதான் -நீ
என்னை கடந்து சென்றாய்,
அதற்குள் இத்தனை
பட்டாம்பூச்சிகள்
சிறகடிக்கின்றன -என்
இதயத்தில்.........!


(பத்திரிகையில் படித்த கவிதை)

செவ்வாய், மார்ச் 17, 2009

கல்லறை

உன்னை நினைத்து
கண்களை மூடினேன்
கனவு சொந்தமானது...
உன்னை மறந்து
கண்களை மூடினேன்
கல்லறை சொந்தமானது...


(கைபேசியில் வந்த கவிதை)

ஞாயிறு, மார்ச் 15, 2009

மனம்போல்

என் வீட்டுச் சன்னலில்
பூ வைத்துப் போனவள்
முகம் மட்டும்
காட்டவில்லை
பூ மட்டும் மணக்கிறது
அவள் மனம் போல்


(தமிழன்பன் கவிதை) 

செவ்வாய், மார்ச் 10, 2009

விழிகள்

படபடக்கும் உன்
விழிகள் பார்த்து
பூக்கள் எல்லாம்
இதழ் விரிக்கின்றன
பட்டாம்பூச்சி
வருகின்றதெனிறு

(பத்திரிகையில் படித்த கவிதை)

பந்தம்

அவள் கண்கள் பார்த்து
நான்
சொல்ல வந்த காதலை
அவள்
புன்னகை பார்த்து
புரிந்துகொண்டேன்
அவள் இன்னொருவன்
பந்தமென்று

(தமிழன்பன் கவிதை) 

சனி, மார்ச் 07, 2009

வருத்தம்

எல்லோரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
வருத்தப்படுகிறார்கள்
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக


(பத்திரிகையில் படித்த கவிதை)

நீ

நீ எனக்கில்லை
என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீ தான்



(தமிழன்பன் கவிதை) 

வெள்ளி, மார்ச் 06, 2009

பிரிவு

உனக்கென்ன போயொழிந்தாய்
பிரிவென்னும் வாணலியில்
வறுபடுகுதடி
இதயம் எனும்
இறைச்சித்துண்டு



(உருதுகவிதை மொழியாக்கம் வைரமுத்து)

கனவு

கனவிலும்
தூங்கினேன்
உன்னைக்
கனவுகண்டு


(தமிழன்பன் கவிதை)

புதன், மார்ச் 04, 2009

சுவடுகள்

உன் பாதச்சுவடுகள்
பார்த்து வரைந்தே
பார் போற்றும்
ஓவியன் ஆகிவிட்டேன்



(தமிழன்பன் கவிதை)

அறியாமை

கத்திபோல் கண்கள்
என்றேன்!
என்
இதயத்தின் மீதுதான்
கூர்பார்க்கப்போகிறாய்
என்பதை தெரிந்து
கொள்ளாமல்.....

(பத்திரிகையில் படித்த கவிதை)

பிழைப்பு

அறுத்து உரிக்கப்படும்
சக தோழனைப்
பார்த்தபடியே
தழைதின்றுகொண்டிருக்கும்
மற்ற ஆடுகள்.


(பத்திரிகையில் படித்த கவிதை)

திருமணம்


யாரோ...
ஒரு பெண்ணுக்கு...
திருமணம்!
மணமகனாக
நான்!!


(பத்திரிகையில் படித்த கவிதை)

மரபு

வார்த்தைகள்
ஆயுதங்கள்
சித்திரவதைகள்
எல்லாவற்றையும்-விட
உன்
மௌனங்களும்
நிராகரிப்புகளுமே
என்னை
அதிகம்புண்படுத்துகின்றது.

(தமிழன்பன் கவிதை)

தவிப்பு

தினமும்-என்
கனவில் வந்து
போகும்-நீ
ஏனோ..?
நியத்தில்
மட்டும்-வர
மறுக்கிறாய்..

(தமிழன்பன் கவிதை)

செவ்வாய், மார்ச் 03, 2009

மடமை

அழ வைப்பது
அவள் என்று தெரிந்தும்
அடம்பிடிக்கிறது
என் கண்கள்...
அவளைத்தான்
காணவேண்டும் என்று....

(தமிழன்பன் கவிதை)

புலி

அறுகம்புற் சாறு
உடம்பிற்கு நல்லது
ஆனால்...
அது எனக்கு பிடிக்காது..!
ஏனென்றால்;
புலி பசித்தாலும்
புல்லை மட்டுமல்ல
அதன் சாற்றைக்கூட குடிக்காது..!

(கைபேசியில் வந்தகவிதை) 

ஆசை

அவள் விரல் நகங்களாய்
இருக்க ஆசை..!
வாழ்வதற்காக அல்ல,
அவள் இதழ்களின்
இடையில் சிக்கி
இறப்பதற்காக....


( எங்கேயோ படித்த கவிதை) 

நினைவு

என் இதயம் கல் என்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
ஆனால்!
அவர்களுக்கு எனன தெரியும்?
என் இதயத்தில் சிற்பமாக
இருப்பவள் நீ என்று.....!


(எங்கேயோ படித்த கவிதை) 

சுமை

60 கிலோ எடை
கொண்ட உன்னை
வெறும் 250 கிராம் எடை
கொண்ட என் இதயம்
எப்படி சுமக்கிறதோ...


(கைபேசியில் வந்தகவிதை) 

காதலி

கவிதை வருவது
எப்படி? என்று கேட்டேன்
"என்னை காதலித்து பார்
கவிதை வரும்" என்று சொன்னவள்
"ஏன் கண்ணீர் வரும்"
என்று சொல்லவில்லை...


(தமிழன்பன் கவிதை)

பெண்

உலகில் உள்ள
பொய்களை எல்லாம்
ஒன்றாக சேர்த்த
போது கிடைத்தது - ஒரு
"பெண்னின் புன்னகை"


(கைபேசியில் வந்தகவிதை) 

நீ வைரம்

பல நூற்றாண்டுகள் ஆகுமே
ஒரு வைரம் உருவாக..!
நீ மட்டும் எப்படி
பத்து மாதத்தில்
கருவானய்...?



(கைபேசியில் வந்தகவிதை) 

வித்தியாசம்


சில பூக்கள்
அவன் மேல் விழுந்தன
சில பூக்கள்
அவள் மேல் விழுந்தன
சிறு வித்தியாசம்
அவன் கல்லறையில்
அவள் மணவறையில்


(கைபேசியில் வந்தகவிதை) 

காத்திருப்பு


உன்னை
எதிரில் பார்க்க
முடியவில்லை
என்றாலும்..!
உயிர் உள்ள வரையில்
எதிர்பார்த்துக்
கொண்டிருப்பேன்....?


(கைபேசியில் வந்தகவிதை) 

நினைவுகள்

நினைவுகள்
விசித்திரமானவை...
என்றோ ஒருநாள்
அழுததை நினைத்தால்
இன்று சிரிப்புவரும்,
என்றோ ஒருநாள்
சிரித்ததை நினைத்தால்
இன்று அழுகைவரும்...


(கைபேசியில் வந்தகவிதை) 

நாளை


இன்றே சிரித்துவிடு
நாளை மறுநாள்
நீயும்....
காதலிக்கலாம்!




(கைபேசியில் வந்தகவிதை) 

புன்னகை


அன்பு அது கடமை,
பாசம் அது உரிமை,
காதல் அது இனிமை,
நட்பு அது உண்மை,
உன் புன்னகை....
ஐயோ!
அது கொடுமை..!


(கைபேசியில் வந்தகவிதை)

புரிதல்


அவள்
அழகின் இரகசியம்
இப்போதுதான் புரிந்தது!
எத்தனை முறை குளித்தாளோ?
ஆண்களின் கண்ணீரில்....
MyFreeCopyright.com Registered & Protected